Thursday, September 29, 2011

ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் பொருந்தாது : ஐகோர்ட் தீர்ப்பு

ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் தொடர்பாக, பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. 

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் தொடர்பாக, 1988ம் ஆண்டு தொழிலாளர் நலத் துறை அரசாணை பிறப்பித்தது. பின், 2003ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சிறுபான்மை பள்ளிகள் மற்றும் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சேவியர் அருள்ராஜ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், "வர்த்தக ரீதியில் பள்ளிகளை நடத்தவில்லை. தொழிலாளர் தொடர்பான பல்வேறு சட்டங்கள், ஆசிரியர்களை தொழிலாளர்களாகக் கருதவில்லை. எனவே, ஆசிரியர்களுக்கு இந்த அரசாணைகள் பொருந்தாது" என குறிப்பிடப்பட்டது.

மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜா பிறப்பித்த உத்தரவு: ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில், நீதிபதி இக்பால் (சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி) தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவில், "கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கிளார்க், பியூன் உள்ளிட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் சட்டம் பொருந்தும். அவர்கள் குறைந்தபட்ச ஊதியம் பெற உரிமையுள்ளது" என கூறப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பின்படி, ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் வரம்புக்குள் வருவர். ஆசிரியர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டம் பொருந்தாது. எனவே, ஆசிரியர்களை பொறுத்தவரை இந்த அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார். 
நன்றி

ஒரே பணியாளர்களை இரு கட்ட தேர்தலிலும் பயன்படுத்த முடிவு

உள்ளாட்சித் தேர்தலில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, இரண்டு கட்ட தேர்தலிலும் ஒரே பணியாளர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் அக்., 17, 19 ல் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதன் பணியில் ஊரக வளர்ச்சி, வருவாய், கல்வித்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உள்ளாட்சித்தேர்தலில் அதிக ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், போதுமான பணியாளர்கள் இல்லை. காலிப்பணியிடங்கள் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் அக்., 17 ல் நடக்கும் முதல் கட்ட தேர்தலில் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு, அக்., 19 ல் நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவு ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கிராமங்களில் நான்கு ஓட்டு பதிவு செய்வதால் தாமதம் ஆகும். இதற்கு போதுமான அலுவலர்கள் தேவைப்படுவதால், முதல்கட்ட தேர்தலில் பணியாற்றியவர்களே இரண்டாம் கட்ட தேர்தலில் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது,'' என்றார். 

நன்றி

வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டால் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 
இதுகுறித்து தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அரசு ஊழியர்கள் தேர்தல் காலங்களில் முற்றிலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். போட்டியிடும் எந்த வேட்பாளருக்கோ, அரசியல் கட்சிக்கோ ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அவ்வாறு எந்த ஒரு அரசு ஊழியராவது போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஈடுபடுவதாக தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி

Saturday, September 3, 2011

பணம் தான் வாழ்க்கையா? வாருங்கள் விளையாடித்தான் பார்க்கலாம்

பணத்துக்கான அருமையை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒரு அடையாள பொருளாக உருவாக்கிய பணம் நம்மை ஆட்டுவிக்கும் நிலைமை. ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் அவசியமாகிறது. காசு கொடுத்தால் தான் கடவுளை கூட பார்க்க முடியும் என்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பணத்தை சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. முயற்சி செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனை விட முயற்சி செய்து தோல்வி அடைபவன் ஆயிரம் மடங்கு மேல் கண்டிப்பாக அவனுக்கு வெற்றி நிச்சயம். பல பேருக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கான என் பதில் கண்டிப்பாக பல வழிகள் இருக்கிறது இணையத்தில் சம்பாதிக்க. அதில் ஒரு வழியான ஈமெயில்கள் படித்தால் பணம் தரும் ஒரு தளத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

இந்த சேவையை பல தளங்கள் நமக்கு வழங்கினாலும் நாம் பார்க்க போகும் Paisa Live தளம் மிகப்பிரபலமான தளம். பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த தளத்தில் முதலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். 

தளத்தின் சிறப்பம்சங்கள்: 
  • நீங்கள் இந்த தளத்தில் சேர்ந்த உடனே உங்களுக்கு போனஸ் தொகையாக Rs 99 உங்கள் அக்கௌண்டில் சேர்த்து விடுவார்கள்.
  • யாரேனும் ஒரு நண்பரை சேர்த்து விட்டால் மேலும் Rs.50/- உங்கள் கணக்கில் சேர்ந்து விடும். 
  • Refferel மூலம் சேர்க்க படும் ஒவ்வொரு நண்பருக்கும் Rs.2/- தொகையை உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள்.
  • எந்த வித ஏமாற்று வேலையும் இல்லாமல் உங்கள் பணத்தை அனுப்பி விடுவார்கள்.
உபயோகிக்கும் முறை:
  • இந்த தளத்தில் உறுப்பினர் ஆகியவுடன் இவர்கள் உங்களுக்கு 10 to 15 ஈமெயில்களை அனுப்புவார்கள். அதை ஒவ்வொன்றாக ஓபன் செய்தால் அதில் ஒரு லிங்க் காணப்படும் அதை க்ளிக் செய்யவும். 
  • இந்த தளத்தில் உறுப்பினர் ஆவதற்கு ஒரு தனி ஈமெயிலை உருவாக்கி அதன் மூலம் சேர்ந்து விடவும். Spam செய்திகள் வர வாய்ப்புள்ளது. 
  • சில ஈம்யில்கள் குறிப்பிட்ட கால அளவு தான் கொடுத்து இருப்பார்கள் அதற்குள் அந்த ஈமெயிலை படிக்க வில்லை என்றால் அந்த ஈமெயில்கள் தானாக அழிந்து விடும். 
  • ஒரு சில ஈமெயில்கள் படித்தால் 2 லிருந்து 3 ரூபாய் வரை தருவார்கள் அது போன்ற ஈமெயில்களை தவற விட வேண்டாம். 
  • தினமும் ஒரு 15 நிமிடம் இதற்காகவே ஒதுக்கி விடுங்கள். 

பணம் பெறும் வழிமுறை:
  • உங்களுடைய கணக்கில் குறைந்தது Rs.500/- வந்தால் தான் உங்களால் இந்த தளத்தில் இருந்து தொகையை பெற முடியும்.
  • Rs.500/- உங்கள் கணக்கில் சேர்ந்தவுடன் நீங்கள் பணம் பெறுதலுக்கான கோரிக்கையை அவர்களுக்கு அனுப்பவேண்டும். 
  • கோரிக்கை அனுப்பிய பிறகு அவர்கள் உங்கள் கணக்கை பரிசோதித்து ஏதாவது வரம்புகள் மீறி இருந்தால் அதற்க்கான தொகையை குறைத்து கொண்டு பதிலை ஏழு நாட்களுக்குள் தெரிவிப்பார்கள்.
  • கடைசியில் உங்கள் அவர்கள் குறைத்தது போக Rs.450/- மேல் உங்கள் கணக்கில் இருந்தால் உங்கள் ப்ரோபைலில் உள்ள முகவரிக்கு காசோலையை அனுப்பி விடுவார்கள். ஆதாலால் கோரிக்கை அனுப்புவதற்கு முன் கோரிக்கை உங்களுடைய தொடர்பு முகவரியை பரிசோதித்து கொள்ளுங்கள்).
இணையத்தில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்கள் தினமும் 15 நிமிடம் செலவழித்து பணம் சம்பாதித்து கொள்ளுங்கள்.

Friday, September 2, 2011

கணினி வழியாக பணம் சம்பாதிக்க